சாலையில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 3 வன ஊழியர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள உயிலட்டி கிராமத்தில் அட்டகாசம் செய்யும் கரடியை பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். இந்நிலையில் வனச்சரக வனவர் பெலிக்ஸ், வேட்டை தடுப்பு காவலர் கவுதமன், வனக்காப்பாளர் சைமன் போன்றோர் இரவு நேரத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பணியை முடித்துவிட்டு காலை 6 மணிக்கு ஜீப்பில் கோத்தகிரி நோக்கி சென்றுள்ளனர்.
இதனையடுத்து பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் திடீரென சாலையின் குறுக்கே நின்ற காட்டெருமை மீது மோதாமல் இருப்பதற்காக ஜீப்பை ஓட்டி வந்த கவுதமன் பிரேக் போட்டுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பிவிட்டனர். அதன் பின் அருகில் உள்ளவர்கள் காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பாபரப்பு ஏற்பட்டுள்ளது.