தேவையான பொருட்கள்
- அரிசி – 2 கப்
- அன்னாசிப்பூ – 2
- கிராம்பு – 4
- பட்டை – 2
- பல்லாரி – 2
- சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – 4 கப்
- உப்பு – தேவைக்கேற்ப
- நெய் – தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் அரிசியை நன்றாக சுத்தம் செய்து 20 நிமிடங்கள் நீரில் ஊறவைக்கவும்.
அடுப்பில் குக்கரை வைத்து அதில் நெய் ஊற்றி பட்டை அன்னாசிப்பூ கிராம்பு ஆகியவற்றைப் போட்டு தாளிக்கவும்.
தாளித்தவற்றுடன் சீரகம் சேர்த்து வதக்கவும்.
பின்னர் அதனுடன் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கவும்.
அதில் சுத்தம் செய்து ஊற வைத்துள்ள அரிசியை வடிகட்டி சேர்க்கவும்.
இறுதியாக தண்ணீர் சேர்த்து தேவைக்கேற்ப உப்பு போட்டு மூடி வைக்கவும்.
2 விசில் வந்ததும் இறக்கி விடலாம்.
சுவைமிக்க சீரக சாதம் ரெடி.