விண்வெளிக்கு சென்று திரும்பிய அமேசான் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜெப் பெசோஸ் வானில் மிதக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நிலவில் மனிதன் சென்று திரும்பியதன் 52 வது ஆண்டை கொண்டாடும் விதமாக விண்வெளிக்கு மனிதர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல ப்ளூ ஆரிஜின் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. அதன்படி அமெரிக்க நாட்டில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் ஏவுதளத்தில் இருந்து நேற்று மாலை நியூ செப்பர்ட் ராக்கெட் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
https://www.instagram.com/tv/CRje0TBHGPS/?utm_source=ig_embed&utm_campaign=loading
இந்த ராக்கெட்டில் உலகப் பணக்காரர்களில் ஒருவரான அமேசான் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜெப் பெசோஸ், அவரது சகோதரர் மார்க் பெசோஸ், வேலிபங்க் என்ற 82 வயதான மூதாட்டி மற்றும் 18 வயதுடைய ஒரு வாலிபர் என மொத்தம் நான்கு பேர் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். இவர்கள் சுமார் 11 நிமிடங்கள் விண்ணில் இருந்த பிறகு பாராசூட் வாயிலாக பூமிக்கு திரும்பி வந்துள்ளனர். இந்த நிலையில் விண்வெளிக்கு சென்ற ஜெப் பெசோஸ் வானில் வின்கலத்துக்குள் மிதந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.