Categories
உலக செய்திகள்

முதல் இடத்தை பிடித்தது யார்..? பிரபல பத்திரிகை வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியல்… வெளியான முக்கிய தகவல்..!!

அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோஸ் தொடர்ந்து 4-வது முறையாக போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோஸ் தொடர்ந்து 4-வது முறையாக போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். மேலும் போர்ப்ஸ் பத்திரிக்கை ஜெப் பெசோஸ் சொத்து மதிப்பு 177 பில்லியன் டாலர் என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது. இதையடுத்து இரண்டாவது இடத்தை டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் பிடித்துள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 151 பில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து பிரான்சை சேர்ந்த எல்விஎம்எச் நிறுவன தலைவர் பெர்னார்டு அர்னால்டு 150 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் ஏற்கனவே மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில் தற்போது 124 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 4-வது இடத்தை பிடித்துள்ளார். அதேசமயம் கடந்த வருடம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி உலக பணக்காரர் பட்டியலில் 21-வது இடத்தில் இருந்து நிலையில் தற்போது 10-வது இடத்தை பிடித்து உயர்ந்துள்ளார்.

Categories

Tech |