விவசாயிகளுக்கு இலவச ஆள்துளை கிணறு அமைத்து தர ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
நமது அண்டை மாநிலமான ஆந்திரா மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அம்மாநில மக்களுக்கு பல நலத்திட்டங்கள் உதவிகளை செய்வதன் மூலம், இந்தியாவின் பிற பகுதிகளில் இருக்கக்கூடிய மக்களையும் தொடர்ந்து கவர்ந்து வருகிறார். ஏனென்றால், அவர் செய்யக்கூடிய நலத்திட்டங்கள் அனைத்தும் ஏழை எளிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைவது தான் அதற்கு காரணம்.
சமீபத்தில் கூட அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் மதுரையில் உண்டாகி அவருக்கு போஸ்டர்கள் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஆந்திராவில் உள்ள விவசாயிகளுக்கு இலவச ஆழ்துளை கிணறு அமைத்து தரும் திட்டத்தை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கிவைத்தார்.
தண்ணீர் கனவு திட்டத்தின் கீழ் மொத்தம் 2 லட்சம் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தர உத்தரவிட்டுள்ளார். இவற்றை ஏழை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க இலக்கு நிர்ணயித்து உள்ளதாக கூறியுள்ளார். இவரது இந்த செயலுக்கு தற்போது பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.