Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஜெகத்ரட்சகன் மீது நில மோசடி வழக்கு – போலி ஆவணங்கள் தயாரித்தது அம்பலம்..!!

நிலமோசடி வழக்கு தொடர்பாக திமுக எம்பி ஜெகத்ரட்சகனை வரும் 5ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் 1995 ஆம் ஆண்டு சென்னை குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் தொழிற்சாலை தலைவராக இருந்தபோது தொழிற்சாலைக்கு சொந்தமான 1.30 ஏக்கர் நிலத்தை நகர்ப்புற உச்சவரம்பு சட்டத்தின் விதிகளை மீறி பிரித்து கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் புகார் குறித்து விசாரிக்க அரசுக்கு உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி அதிகாரிகள் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் இடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தபோது ஒரு சர்வே எண்ணை பயன்படுத்தி பல ஆவணங்களை முறைகேடாக தயாரித்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பான விசாரணைக்கு வரும் 5-ஆம் தேதி திமுக எம்பி ஜெகத்ரட்சகனை ஆஜராகுமாறு சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |