மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குவாட் அமைப்பால் இந்தோ பசிபிக் பிராந்தியத்திற்கு நன்மை தான் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில் இருக்கும் மெல்போர்ன் நகரத்தில் குவாட் அமைப்பை சேர்ந்த வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்திருக்கிறது. ஜப்பான் மற்றும் அமெரிக்கா உட்பட சில நாடுகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.
இந்நிலையில், சீனா, தங்கள் நாட்டின் வளர்ச்சியை தடுப்பதற்காகவும், அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநாட்டவும் தான் இந்த அமைப்பு பயன்பட்டுக் கொண்டிருக்கிறது என்று குற்றம்சாட்டியது. இந்நிலையில் ஆஸ்திரேலிய நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரான மரீஸ் பெய்னெ, ஜெய்சங்கர் இருவரும் நேற்று அளித்த நேர்காணலில், குவாட் கூட்டமைப்பில் இருக்கும் நான்கு நபர்களும் நன்மைகள் ஏற்படுத்தக் கூடிய விசயங்களை பற்றி தான் ஆலோசித்தோம்.
இந்தோ பசுபிக் பிராந்தியத்திற்கான அமைதி, வளம் மற்றும் நிலைத்தன்மை போன்றவற்றிற்காக தான் அங்கு சென்றோம். எங்களின் கருத்துக்கள், நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகளில் அது தெளிவாக தெரியும். தொடர்ச்சியாக கூட்டமைப்பை விமர்சித்துக் கொண்டிருப்பதன் மூலமாக குவாட்டின் நம்பகத்தன்மையை எவராலும் குறைக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.