Categories
உலக செய்திகள்

இந்தியா-நியூசிலாந்திற்கு இடையே ஒத்துழைப்பு வேண்டும்…. ஜெய் ஷங்கர் பேச்சு…!!!

இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையே இருக்கும் உறவில் புத்துணர்ச்சி தேவை என்று வெளியுறவுத் துறை மந்திரியாக இருக்கும் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார்.

வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அதன்படி வெலிங்டனில் கட்டப்பட்டிருக்கும் இந்திய உயர் ஆணையரகத்தை திறந்து வைத்துள்ளார். அப்போது அவர் தெரிவித்ததாவது, நியூசிலாந்து இந்தியா நாடுகளுக்கு இடையே இருக்கும் உறவை வளர்க்க வேண்டும்.

அது விவேகமான வழியாக அமையும். இரண்டு நாடுகளுக்கிடையேயான உறவு புத்துணர்வு பெற தயார் நிலையில் இருக்கிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளின் பிரதமர்களுடைய தொலைநோக்கான பார்வை தான் இரு நாடுகளுக்கிடையே உறவை பலமாக்குகிறது. கல்வி, விவசாயம், டிஜிட்டல், வணிகம், பாரம்பரிய மருத்துவம், கடல் சார் பாதுகாப்பு ஆகிய துறைகளில் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

வலிமையான ஒத்துழைப்பானது செழிப்பு, முன்னேற்றம் மற்றும் அமைதியை உறுதிப்படுத்தும். கிரிக்கெட் விளையாட்டில் இருக்கும் ஒத்துழைப்பு இதற்கு சிறந்த உதாரணம் என்று கூறி இருக்கிறார்.

Categories

Tech |