Categories
உலக செய்திகள்

அதிகரித்த நிதி நெருக்கடி… வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இலங்கை பயணம்…!!!

மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர் இலங்கை நாட்டின் நிதித்துறை மந்திரி பசில் ராஜபக்சேவை சந்தித்து பொருளாதார நிலை தொடர்பில் ஆலோசனை செய்திருக்கிறார்.

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், 5 நாட்கள் பயணமாக மாலதீவிற்கும்,  இலங்கைக்கும் சென்றிருக்கிறார். இரண்டு நாடுகளுக்கிடையேயான உறவை மேம்படுத்துவதற்கும், புதிய ஒப்பந்தங்கள் தொடர்பில் விவாதிக்கவும் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசு, சீன நாட்டின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதற்காக இந்திய பெருங்கடலில் இருக்கும் இரு முக்கிய பக்கத்து நாடுகளுடன் தங்கள் உறவை மேம்படுத்த விரும்புகிறது. அதன்படி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி இரு நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

இலங்கையின் நெடுஞ்சாலைகள், சுற்றுலா, எரிசக்தி மற்றும் விமான போக்குவரத்து துறைகளை வழிநடத்திக் கொண்டிருக்கும் மந்திரிகள் நான்கு பேர் அவருக்கு அதிக வரவேற்பு அளித்தனர். அதனையடுத்து அவர் அந்நாட்டின் நிதித்துறை மந்திரியான பசில் ராஜபக்சேவை நேரில் சந்தித்திருக்கிறார்.

அப்போது இலங்கையினுடைய நிதி நெருக்கடி மற்றும் அதற்கு இந்தியாவின் ஆதரவு தொடர்பில் ஆலோசனை செய்திருக்கிறார்.

Categories

Tech |