Categories
உலக செய்திகள்

ரஷ்யாவை சேர்ந்த அறிவியலாளர் ஜெர்மனியில் கைது.. காரணம் என்ன.? வெளியான தகவல்..!!

ரஷ்யாவைச் சேர்ந்த அறிவியலாளர் ஜெர்மனி பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த நிலையில் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஜெர்மனியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த அறிவியலாளர் பணியாற்றி வந்திருக்கிறார். இவர் கடந்த 2020-ம் வருடம் அக்டோபர் மாதத்திலிருந்து இம்மாதம் வரை ரஷ்யாவின் உளவுத் துறையில் இருக்கும் ஒரு நபரை மூன்று தடவை சந்தித்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல் பல்கலைக்கழகத்தின் தகவல்களை அந்த நபருக்கு தெரியப்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

இதற்காக அவர் பணம் வாங்கியதாக சந்தேகிக்கப்படுகிறது. எனவே ஜெர்மன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த அறிவியலாளரின் பெயர் Ilnur N என்று மட்டுமே தகவல் வெளியாகியுள்ளது.

அவர் பணியாற்றும் பல்கலைக்கழகத்தின் பெயர் உட்பட வேறு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தற்போதுவரை அவர் கைது செய்யப்பட்டதற்கு ஜெர்மன் அரசு மற்றும் ரஷ்யா எந்தவித கருத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |