Categories
உலக செய்திகள்

ஜேர்மன் சேன்சலர்…. பிரபல நாட்டு ஜனாதிபதியை சந்தித்த…. காரணம் என்ன….?

சீனாவுக்குச் சென்றுள்ள ஜேர்மன் சேன்சலரான ஓலாஃப் ஷோல்ஸ், சீன ஜனாதிபதியான ஜி ஜின்பிங்கை சந்தித்துள்ளார்.

சீனாவின் சர்வாதிகாரப் போக்கு கடும் கண்டனங்களை எதிர் கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஜேர்மன் சேன்சலர் சீனா நாட்டிற்கு சென்றுள்ள விடயம் விமர்சனங்களை உருவாக்கி வருகிறது. மேலும் தொழில்துறையினருடன் ஷோல்ஸ் சீனா நாட்டிற்கு சென்றுள்ளதன் நோக்கமானது அந்நாட்டுடன் வர்த்தக உறவுகளை அதிகரிப்பதாகும். அதன் ஆற்றலுக்காக ஜேர்மனி பெருமளவில் ரஷ்யாவை சார்ந்துள்ளது.

அந்நாடு சந்தித்த பிரச்சினைகளையும், அதாவது, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து அந்நாட்டு மீது விதிக்கப்பட்ட தடைகளுக்கு பழிக்குப் பழியாக ரஷ்யா எரிவாயு வழங்கலை துண்டித்த விடயத்தையும் இப்போது மீண்டும் உலக நாடுகள் நினைவு கூறுகின்றது. மேலும் கடந்த மூன்று  முறை சீனாவுக்குச் சென்றுள்ள முதல் G7 நாடுகளின் தலைவர் ஷோல்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |