Categories
உலக செய்திகள்

ஜெர்மனியில் ஊரடங்கு தளர்வுகள்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

 ஜெர்மனியில் படிப்படியாக கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படும் என சான்சலர் ஏஞ்சலா தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் குறைந்து வருவதால் பலநாடுகளில் ஊரடங்கு தளர்வு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜெர்மனியில்  சான்ஸ்லர் ஏஞ்சலா மெர்க்கெல் கொரோனா  கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்வு பெறும் என்று தெரிவித்துள்ளார். பொது முடக்கத்தில் பல மாதங்கள் இருந்த நிலையில் பிராந்தியா தலைவர்களுடன் தொடர்பு கொண்டு மக்கள் இந்த அறிவிப்பை தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் 16 பிறந்த தலைவர்களுடன் மெர்க்கெல் சுமார் 9 மணி நேரம் ஆலோசித்து இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஜெர்மனியர்கள் சமூகமயமாக்க மார்ச் 8 ஆம் தேதி திகதி திங்கட்கிழமை அனுமதிக்கப்படுகிறார்கள். இரண்டு வீடுகளில் ஐந்து நபர்கள் இருக்கலாம் என்றும் குழந்தைகள் கணக்கில்லை என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு சில பள்ளிகள் புத்தக கடைகள் பூக்கடைகள் தோட்ட  மையங்கள் என நாடு முழுவதும் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பும் என்று தெரிவித்தார். சில தளர்வுகள் நீங்கினாலும் முக்கியமாக கடைபிடிக்கப்படும் சில கட்டுப்பாடுகள் மார்ச் 28ஆம் தேதி பின்பற்றபடும் என்று மெர்க்கெல் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜெர்மனியில் 5 நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் எனவும் ஒவ்வொரு தளர்வுகள் நாட்கள் இடைவெளியில் நிகழ்த்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதனிடையில்  வைரஸ் தொற்று அதிகரிக்கும் நிலையில் மீண்டும் கட்டுபாடுகள் அமல்படுத்தப்படும் என்று உறுதியாககூறினார். ஜெர்மனியில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் மார்ச் 8 ஆம் தேதி திகதி முதல் கொரோனா  ரேப்பிட் சோதனைசெய்யப்படும். மேலும் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆஸ்ரா ஜனகா என்ற தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

Categories

Tech |