ஜேர்மன் நாட்டின் ஜனாதிபதியான Frank-Walter Steinmeier அந்நாட்டிற்கு புலம்பெயர்ந்தவர்கள் ஆற்றியுள்ள பணிகளை அளவிட முடியாது என மனதார பாராட்டியுள்ளார்.
ஜேர்மனில் துருக்கி நாட்டவர்கள் பணி செய்வது குறித்து ஒப்பந்தம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் 60 ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று உள்ளது. அந்த நிகழ்ச்சியில் ஜேர்மன் நாட்டின் ஜனாதிபதி Frank-Walter Steinmeier உரையாற்றியுள்ளார். அதில் அவர் கூறியதாவது “எங்கள் நாட்டிற்கு புலம்பெயர்ந்தோரின் துருக்கிய குடும்பங்களை நான் மனதார பாராட்டுகின்றேன். மேலும் அவர்கள் எங்கள் நாட்டில் இன்றியமையாத இடத்தை பிடித்தவர்கள் ஆவர். இதனையடுத்து வெளிநாடுகளில் இருந்து எங்கள் நாட்டுக்கு புலம்பெயர்ந்து வந்து வேலை செய்தவர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் இல்லையென்றால் தற்போதைய ஜேர்மனியை நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது. அதாவது எங்கள் நாடு கடந்த 1950 களில் வெளிநாட்டு பணியாளர்களை விவசாயம், கட்டுமானம், எஃகு, தானியங்கி மற்றும் சுரங்க வேலைகளுக்காக பணியமர்த்த துவங்கியது.
அதுமட்டுமல்லாமல் கடந்த 1961 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி எங்கள் நாடு பணியாளர்களை அனுப்புவது தொடர்பாக துருக்கி உடன் ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது. அதன்பின் குறைவான சம்பளத்திற்க்கு தற்காலிக தொழிலாளர்களாக சுமார் 710,000 துருக்கியர்கள் எங்கள் நாட்டுக்கு வேலைக்காக வந்தார்கள். அதன்பின் கடந்த 1973 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் துருக்கிக்கு திரும்பியுள்ளனர். இதற்கிடையில் பலர் தங்கள் குடும்பங்களை துருக்கியில் இருந்து வரவழைத்து எங்கள் நாட்டிலேயே தங்கிவிட்டார்கள். மேலும் துருக்கி மற்றும் மற்ற நாடுகளிலிருந்தும் எங்கள் நாட்டிற்கு புலம்பெயர்ந்த மக்கள் பொருளாதார ரீதியாக செழிப்பாகவும் வலிமையாகவும் மாறுவதற்கு அதிக அளவில் பங்களித்துள்ளார்கள்.
மேலும் எங்கள் நாட்டுக்கு புலம்பெயர்ந்த மக்களை பின்னணி கொண்டவர்கள் என்று நான் சொல்லவில்லை ஜேர்மனி புலம்பெயர்தல் பின்னணி கொண்ட நாடு என்று கூறினேன். அதாவது அந்த காலகட்டத்தில் மொழி வகுப்புகள், ஆதரவு, ஒருங்கிணைப்பு கொள்கைகள் என எதுவும் இல்லாத நிலையில் அவர்களை ஏற்றுக் கொள்வதற்கு நமது சமூகத்திற்கு நீண்ட காலம் பிடித்தது. இதனைத்தொடர்ந்து பிற நாட்டவர்கள் மீதான வெறுப்பு நம் நாட்டில் ஏற்படுவதை சகித்துக் கொள்ள இயலாது. இருப்பினும் எங்கள் நாடு மத நம்பிக்கை இல்லாதவர்களை எப்படி ஏற்றுக் கொள்கிறதோ அதேபோல இஸ்லாமியர்களும் தன் நாட்டின் ஒரு அங்கத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் இது உங்கள் நாடு என்று கூறினால் எங்கள் நாட்டில் பல்வேறு நம்பிக்கைகளுக்கும் இடமுண்டு” என அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.