Categories
உலக செய்திகள்

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா…! 2ஆம் அலையால் நடுங்கும் ஜெர்மன்… பொதுமுடக்கம் நீட்டிப்பு…!!

வருகின்ற பிப்ரவரி 14ஆம் தேதி வரை ஜெர்மனியில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக ஜெர்மனி அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரசால் அதிகளவு பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. தற்போது அங்கு கொரோனா வைரஸின் இரண்டாம் அலை  மிக வேகமாக பரவி வருவதால் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும்,அதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஜெர்மனியில் இதுவரை 20,00,000க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் கொரோனாவால் ஜெர்மனியில் இதுவரை 49,500க்கும்  மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனிடையே கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது குறித்து  ஜெர்மன் அரசு தீவிர ஆலோசனையில்  ஈடுபட்டிருந்தது. அப்போது புதிய வகை உருமாறிய வைரஸ் மிக வேகமாக பரவியதன் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் அங்கு வைரஸின் தாக்கம் சிறிதும் குறையாததால் பிப்ரவரி 14ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து  ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் கூறுகையில்,” கொரோனா வைரசின் தாக்கம் குறையும் வரை இந்த ஊரடங்கு அமல்படுத்தப்படும் ” என்று  தெரிவித்துள்ளார்.

Categories

Tech |