Categories
உலக செய்திகள்

கொரோனாவின் 3ம் அலை… 3வது பொதுமுடக்கம் அமல்படுத்தப்படலாம்… ஜெர்மன் சேன்சலர் எச்சரிக்கை….!!

ஜெர்மனியில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸின் மூன்றாவது அலை பரவும் அபாயம் உள்ளதால் 3வது பொது முடக்கம் அமல்படுத்தப்படலாம் என ஏஞ்சலா மெர்க்கெல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜெர்மனியில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவுவதால் அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்  கொரோனாவின்  மூன்றாவது அலை பரவும் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளதால் இரண்டாவது பொதுமுடக்கம்  முடிவதற்கு முன்பே மூன்றாவது பொதுமுடக்கத்தை அமல்படுத்துவதற்கு வாய்ப்பிருக்கிறது என்று ஜெர்மன் சேன்சலர் ஏஞ்சலா மெர்க்கெல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜெர்மனியில் 4% மக்களுக்கு மட்டுமே கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இந்நிலையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பாதிப்படையும் மக்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. எனவே கொரோனாவை  கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 7ஆம் தேதி வரை விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீட்டிக்க ஏஞ்சலா மெர்க்கெலும் ஜெர்மன் மாகாண தலைவர்களும் ஆலோசனை செய்து முடிவு எடுத்துள்ளனர்.

மார்ச் 1 முதல் முடிதிருத்தும்  நிலையங்கள் திறக்கப்பட உள்ளது. இருப்பினும் ஏழு நாட்களில் 1,00,000-த்தில் 35 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருக்கிறது என்ற நிலைமை ஏற்பட்டால்  மட்டுமே மற்ற தொழில்களை தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |