Categories
உலக செய்திகள்

“நாங்க இருக்கிறோம்”…. வெள்ளப்பாதிப்பு ஏற்பட்ட பகுதிகள் சீரமைப்பு…. உதவி கரம் நீட்டும் தன்னார்வலர்கள்….!!

சிரியா அகதிகள் தன்னார்வலர் குழு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஜெர்மனி நாட்டில் கடந்த மாதம் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் 180 பேர் பலியாகியுள்ளனர். இந்த வெள்ளப் பாதிப்பினால் பல்வேறு நகரங்கள் சேதமடைந்துள்ளன. இதனை சமூக வலைதளங்களில்  கண்ட சிரிய அகதிகள் அவற்றை சீரமைக்கும் பணிகளில்  ஈடுபட்டுள்ளனர். அதில் குப்பைகளை அகற்றுவது, தேவாலயங்களை தூய்மைப்படுத்துதல் மற்றும் மறுசீரமைத்தல் போன்ற பணிகளை  சிரிய அகதிகள் தன்னார்வலர் குழு செய்து வருகிறது. இந்த குழுவில் உள்ள தன்னார்வலர்களில் ஒருவரான Barakat Oubaid கூறியதில் “ஜெர்மனியில் நல்லது நடந்தாலும் சரி தீமை நடந்தாலும் சரி அவர்களோடு கைகோர்க்க நாங்கள் இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

இந்த தன்னார்வலர்களில் பலர் 2015 ல் சிரியா போரில் இருந்து தப்பியவர்கள். இவர்களை ஜெர்மனி முன்வந்து ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும் Mouaiad Abedelbi  என்ற தன்னார்வலர் கூறியதில் “ஜெர்மனியில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் சேதம் அடைந்துவிட்டன. அதில் எங்களின் வீடும் ஒன்று. இப்பொழுது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படி உணர்கிறார்களோ அவ்வாறே நாங்களும் உணர்கிறோம். மேலும் நாங்கள் அங்குள்ள மக்களுக்கு உதவத்தான் இருக்கிறோம். நாங்கள் அவர்களுடன் சேர்ந்து சீரமைப்பு பணிகளில் உதவி புரிகிறோம். இதுவே எங்களின் கடமை” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |