அமெரிக்க தூதரக அதிகாரிகள் இரவு நேரத்தில் ஏற்படக் கூடிய ஒரு வித்தியாசமான பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜேர்மனி நாட்டில் வாழும் அமெரிக்கர்கள் சிலர் என்னவென்று தெரியாத ஒரு வித்தியாசமான பிரச்சினையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த பிரச்சனை என்னவென்றால் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு இரவு நேரத்தில் கீச்சிடும் ஒரு வித்தியாசமான சத்தம் காதுகளில் கேட்கின்றது. அந்த சத்தத்தை கேட்ட பின் அவர்களுக்கு தலை சுற்றல், வாந்தி, மயக்கம் மற்றும் மூக்கிலிருந்து இரத்தம் வடிதல் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றது. இதில் குறிப்பான விஷயம் என்னவென்றால் இதற்கு முன்னும் பல நாடுகளில் வாழும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதாவது இந்த பிரச்சனைக்கு பெயர் Havana Syndrome ஆகும். இந்த பிரச்சனை முதன்முதலில் கடந்த 2016 ஆம் ஆண்டு கியூபாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தப் பிரச்சினைக்கு பின்னால் ரஷ்யா போன்ற பல நாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பாதிப்பானது மைக்ரோவேவ் அலைகள் அல்லது சோனிக் அலைகள் அல்லது இயந்திரம் ஒன்றில் கோளாறு ஏற்படுவதன் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் இந்த பிரச்சனை அமெரிக்க தூதரக அதிகாரிகளை மட்டும் ஏன் குறிப்பாக பாதிக்கிறது என்ற கேள்விக்கு தற்போது வரை பதில் இல்லை. இந்த பிரச்சனை முதன் முதலில் நேட்டோ உறுப்பு நாடு ஒன்றில் வாழும் அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.