Categories
உலக செய்திகள்

அடுத்து ஆட்சியை பிடிக்கப்போவது யார்….? நாடே எதிர்ப்பார்க்கும் நிகழ்வு…. கவலையில் இருக்கும் ஏஞ்சலா மெர்க்கல்….!!

ஜெர்மனியில் நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஏஞ்சலா மெர்க்கலின் ஆட்சி தோல்வியடைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜெர்மனியில் சேன்ஸலராக இருக்கும் ஏஞ்சலா மெர்க்கல் Christian Democratic Union கட்சியைச் சேர்ந்தவர். இவர் கடந்த 16 ஆண்டுகளாக ஜெர்மனியில் ஆட்சி புரிந்து வருகிறார். இந்த நிலையில் இவரது இடத்தை அடுத்து பிடிக்கப்போவது யார்? என்பது குறித்து ஜெர்மனி மட்டுமின்றி உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து ஆட்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எவரும் நிலையாக நிற்கவில்லை. ஒருவேளை நின்றாலும் மக்கள் மனதில் இடம் பெறவில்லை. மேலும் இறுதியாக கட்சியிலிருந்து  Armin Laschet வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆனால் அவரின் சில தவறுகளால் Arminனின் மதிப்பு மக்களிடேயே குறைந்துவிட்டது.

குறிப்பாக சமீபத்தில் ஜெர்மனியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும் வலிமையான நாடு என்று நினைத்துக்கொண்டிருந்த ஜெர்மனியர்கள் இந்த வெள்ளப் பாதிப்பினை சரிசெய்ய முடியாமல் சிக்கி தவித்தனர். இதனால் அவர்களின் கோபம் முழுவதும் அரசியல்வாதிகளை நோக்கி பாய்ந்தது. அந்த இக்கட்டமான சமயத்தில் வெள்ளப்பாதிப்பு தொடர்பாக பேட்டி எடுக்கப்பட்டது. அதில் Armin Laschet மற்ற அரசியல்வாதிகளுடன்  சிரித்து பேசும் காணொளி ஒன்று வெளியானது.

இதனை கண்ட பொதுமக்கள் கோபத்தின் உச்சிக்கு சென்றனர். இதுவே Armin Laschetன் கடைசி சிரிப்பு என மக்கள் முடிவு செய்துவிட்டனர். அதிலும் இதுவரை பெரும்பான்மையில் இருந்த ஏஞ்சலா மெர்க்கலின் கட்சியை தற்பொழுது வெறும் 20% பேர் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளனர். குறிப்பாக வரும் 27 ஆம் தேதி ஜெர்மனியில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தனது கட்சி கடுமையான வீழ்ச்சியில் உள்ளதாகவும் தோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் ஏஞ்சலா மெர்க்கலே ஒப்புக்கொண்டுள்ளார்.

Categories

Tech |