Categories
உலக செய்திகள்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ரயில் சாரதிகள்…. பயணிகள் அவதி…. பிரபல நாட்டு ரயில்வே யூனியன் வெளியிட்ட அறிவிப்பு….!!

ஊதிய பிரச்சனையை மேற்கோள்காட்டி ரயில் சாரதிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பயணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜேர்மனியில் ரயில் சாரதிகள் ஊதிய பிரச்சனையை மேற்கோள்காட்டி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சரக்கு ரயில்களின் சேவை கடந்த 1 ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மறுநாள் பயணிகளை ஏற்றி செல்லும்  ரயில்களின் சேவையும் வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பயணிகளின் ரயில் சேவைகள் வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த ரயில்வே பணியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் வரும் 7 ஆம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ரயில்வே நிறுவனம் ரயில் பணியாளர்களுக்கு 600 யூரோக்கள் கொரோனா ஊக்கத்தொகை அளிப்பதாகவும் மிக விரைவில் ஊதியத்தை அதிகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் ரயில் சாரதிகள் அதற்கு உடன்படவில்லை. இதுகுறித்து ரயில்வே யூனியன் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் கூறியதாவது “பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு ரயில்களின் வேலை நிறுத்த போராட்டம் வரும் 7 ஆம் தேதி வரை நீடிக்கும்” என தெரிவித்துள்ளது.

Categories

Tech |