ஜெர்மனியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் சில பேருக்கு கிறிஸ்துமஸுக்கு முன்னபாக தற்காலிகமாக சிறிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடுகளின் போட்டோக்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஜெர்மன் அரசாங்கம் ஜூலை மாதம் அந்நாட்டில் பல பகுதிகளை தாக்கிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 30 பில்லியன் யூரோ மீட்பு நிதியை அமைத்துள்ளது. மேற்கு மற்றும் தெற்கு ஜெர்மனி வெள்ளத்துக்கு பின் மீண்டும் கட்டமைக்க உதவுவதே இதன் நோக்கம் ஆகும்.
தற்போது தலா 30 சதுர மீட்டர் அளவுள்ள 25 சிறிய வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குளியலறை, படுக்கையறை மற்றும் திறந்த சமையலறை இருக்கிறது. வீடுகள் படுக்கை துணி, கெட்டில் மற்றும் காபி மேக்கர் போன்றவற்றுடன் முழுமையாக பொருத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஃபிரான்சிஸ்கா ஹில்பெரத் என்ற நபர் கூறியபோது, “தன் சிறிய வீடு தன் கிறிஸ்துமஸ் மரத்துக்கு போதுமானதாக இல்லை. ஆனால் தனக்கென தங்குவதற்கு ஒரு மேற்கூறியுடன் வீடு அமைத்துக் கொடுக்க உதவிய மக்களுக்கு இன்னும் நன்றியுள்ள ஆளாக இருப்பேன்.
மேலும் இங்கு வந்து இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இதனிடையில் மீண்டும் தனியுரிமையைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், யாரோ ஒருவரின் படுக்கையிலோ அல்லது ஏர்பேட்களிலோ இரவைக் கழிக்கவில்லை என்பதில் மகிழ்ச்சியடைகிறோம்” என்று அவர் கூறினார். ஜூலை மாதத்தில் ஐரோப்பாவில் ஏற்பட்ட வெள்ளம், முக்கியமாக ஜெர்மனிய மாநிலங்களான Rhineland Palatinate, North Rhine-Westphalia மற்றும் பெல்ஜியத்தின் சில பகுதிகளைத் தாக்கியது. மின்சாரம் அல்லது தகவல் தொடர்பு இன்றி முழு சமூகங்களும் துண்டிக்கப்பட்டது.