ஆந்திர மாநிலத்தில் ரேஷன் கார்டில் இயேசுவின் உருவம் அச்சிடப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.
ஆந்திர பிரதேசத்தில் குடும்ப அட்டையில் இயேசு கிறிஸ்துவின் திருவுருவ படம் அச்சிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மேலும் இது குறித்து பல வகையான விமர்சனங்கலும எழுந்து வருகிறது.
இந்நிலையில் இந்த நிகழ்வு பற்றி ஆந்திர அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
வத்லமாறு பகுதியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஒருவர், குடும்ப அட்டையில் இயேசுவின் உருவப்படத்தை அச்சிட்டுமேலும் அதை சமூக வலைதளங்களிலும் பரப்பி வருகிறார். அந்த நபர் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர் ஆவார்.
கடந்த 2016ம் ஆண்டு அவர் தனது குடும்ப ரேஷன் அட்டையில் சாய் பாபாவின் உருவ படத்தையும், 2017 மற்றும் 2018ம் ஆண்டில் விஷ்ணுவின் உருவத்தையும் அச்சிட்டிருக்கிறார். இந்த செயலுக்கு அவர் மீது சீக்கிரமாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது.