ஜெட் ஏர்வேஸ் விமான சேவையை மீண்டும் தொடங்க விடப்பட்ட ஏலத்தில் கேல்ராக்ட் கேப்பிடல் முராரி சேலஞ்ச் நிறுவனங்களுக்கு கடன் வழங்கியோர் குழுவைச் சேர்ந்த ஒப்புதல் அளித்துள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த தனியார் விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் கடன் தொல்லையால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது. இதனால் கடந்த 2019 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் முதல் சேவையை நிறுத்திக் கொண்டது. இதையொட்டி இந்த நிறுவன பங்குகளை விற்று கடன் தொகையை மீட்டெடுக்க ஸ்டேட் வங்கி தலைமையிலான குழு முயற்சி செய்தது.
இந்த நிறுவனத்தை வாங்க முன் வந்தோர் அளிப்பதாக தெரிவித்த தொகை கடன் தொகைக்கு ஈடாக இல்லாததால் இந்த வர்த்தகம் முடிவடையாமல் இருந்தது. தற்போது கேல்டாக் கேபிடல் என்னும் நிதி நிறுவனம் மற்றும் அமீரகத்தில் வசிக்கும் தொழிலதிபர் முராரிலால் சேலாம் ஆகியோரின் கூட்டணி இந்த நிறுவனத்தை வாங்க முற்பட்டது. இதற்கு கடன் வழங்கியோர் குழுவைச் சேர்ந்தோர் ஒப்புதல் அளித்துள்ளனர்.