Categories
பல்சுவை

”ஜெட் வேகத்தில் சென்ற தங்கம் விலை குறைகின்றது” பொதுமக்கள் மகிழ்ச்சி…!!

தங்கத்தின் விலை சவரனுக்கு 128 ரூபாய் குறைந்து விற்பனை செய்வதால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதமாகவே ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலையால் பொதுமக்கள் , நடுத்தர வர்க்கத்தினர் மிகுந்த அச்சத்தில் இருந்தனர்.இந்த சூழ்நிலையில் தற்போது ஒரு வார காலமாக கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் வரை தங்கத்தின் விலை குறைந்துள்ளது.கடந்த வாரம் 30ஆயிரத்தை தாண்டிய தங்கத்தின் விலை தற்போது குறைந்து வருகின்றது.சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 29,000_த்திற்கும் கீழ் சென்ற்றுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் 128 குறைந்து 28, 944 விற்பனை செய்யப்படுகின்றது.ஒரு கிராம் தங்கம் ரூ 16 குறைந்து 3618 விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் வெள்ளி விலை கிராமிற்கு 40 காசு உயர்ந்து 50 .80_க்கு விற்பனை செய்யப்படுகின்றது.கடந்த ஒரு மாத காலமாகவே தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்த நிலையில் தற்போது குறைந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |