நெஞ்சு வலியால் துடிப்பது போல் நடித்து பெண் 10 பவுன் தங்க நகையை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள பெத்தானியாபுரத்தில் ஜெயசுதா என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தில் வசிக்கும் தனது சித்தி மகளின் திருமணத்திற்காக சென்றுள்ளார். இந்நிலையில் திருமண விழா முடிந்தபிறகு வீடு திரும்புவதற்காக திருமங்கலம் -கோவில்பட்டி பேருந்தில் ஜெயசுதா ஏறியுள்ளார். அப்போது பக்கத்தில் இருந்த பெண் தனக்கு நெஞ்சுவலிப்பது போல நடித்து தீடிரென கள்ளிக்குடியில் இறங்கிவிட்டார்.
அதன்பிறகு ஜெயசுதா தனது பையை பார்த்தபோது அதிலிருந்த 10 பவுன் தங்கநகை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து ஜெயசுதா திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.