பெண் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முத்துராமன்பட்டி பகுதியில் வேல்முருகன் – பத்மினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர் அதே பகுதியில் இருக்கும் பத்திரகாளி அம்மன் கோவிலில் பணி புரிந்து வருகிறார். இதனை அடுத்து கணவன் மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் பத்மினி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றுவிட்டனர். இது குறித்து வேல்முருகன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.