Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஒரே நேரத்தில் இரண்டு வீடு…. மர்ம நபர்கள் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

விருதுநகரில் ஒரே சமயத்தில் 2 வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆண்டாள்புரம் பகுதியில் சசிகுமார் – சாந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினர் மேல் தளத்தில் வாடகைக்கு குடியிருக்கின்றனர். இதனை அடுத்து கீழ்த்தளத்தில் வீட்டின் உரிமையாளரான ஆனந்த் குடி இருக்கின்றார்.

இவர் மதுரையில் வேலை பார்த்து வருவதால் வாரம் ஒருமுறை மட்டும் வீட்டிற்கு வந்து செல்வார். இந்நிலையில் சாந்தி தனது மகளை அழைத்து பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் உரிமையாளரின் வீட்டின் கதவும் தனது வீட்டின் கதவும் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து தனது கணவர் சசிகுமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு சசிகுமார் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் வீட்டின் உரிமையாளர் வீட்டிலிருந்த 12000 ரூபாய் மர்ம நபர்களால் கொள்ளையடித்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனை அடுத்து சசிகுமார் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |