செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே வங்கி ஊழியர் வீட்டில் நகை பணம் கார் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம் மங்கல பகுதியில் வசித்து வரும் நந்தகோபால் என்பவர் எஸ்பிஐ வங்கியில் காசாளராக பணியாற்றி வருகிறார். சனிக்கிழமை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்ற அவர் ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்பிய போது வெளிப்புற கேட்டின் தாழ்பாள் சேதப்படுத்தப்பட்டு உட்பக்கம் நிறுத்தப்பட்டிருந்த 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஷிப்ட் கார் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் வீட்டு கதவின் பூட்டு சேதப்படுத்தப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 8 சவரன் தங்க நகை வெள்ளி பொருட்கள் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான எல்இடி டிவி ரொக்கப்பணம் உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தது தெரியவர காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தற்போது இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.