பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மண்டபசாலை கிராமத்தில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு 1 வயதுடைய குழந்தையுள்ளது.
இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்த மர்ம நபர்கள் சத்யாவிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்த அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து கார்த்திக் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.