பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புகோட்டை பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் அரசு கால்நடை மருத்துவமனையில் பராமரிப்பு உதவியாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் தீபாவளி தள்ளுபடியின் போது ராஜலட்சுமி பஜாருக்கு சென்று டி.வி. வாங்கிவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது ராஜலட்சுமியை தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை பறித்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து ராஜலட்சுமி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.