சமையல் மாஸ்டரின் வீட்டில் மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கூழமந்தல் கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அஞ்சலை என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு சுவேதா என்ற மகளும், சதீஷ்குமார் என்ற மகனும் உள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 20 – ஆம் தேதியன்று ரமேஷ் வெளியே சென்றுள்ளார். அதன்பிறகு அஞ்சலை தனது உறவினர் வீட்டிற்கு சென்று இருந்துள்ளார்.
இந்த தம்பதிகளின் மகன், மகள் இருவரும் செய்யாறு சிப்காட் காலணியில் இருக்கும் தொழிற்சாலையில் வேலைக்கு செய்து வருகின்றனர். அதன் பிறகு திரும்பி வந்த ரமேஷ் மற்றும் அஞ்சலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பிறகு வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவிலிருந்த 26 பவுன் தங்க நகை, 1 ¼ லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து ரமேஷ் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.