அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தென்றல் நகர் பகுதியில் அனுராதா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகின்றார். கடந்த 29 – ஆம் தேதியன்று அனுராதா தனது வீட்டை பூட்டிவிட்டு திருச்சியில் இருக்கும் மகளையும், மருமகனையும் அழைத்துவரச் சென்றிருந்தார்.
அதன் பிறகு அனுராதா வீட்டிற்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை அடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 1½ கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் 1½ பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து அனுராதா காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.