Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி: ஜன-31 வரை நிலுவைத்தொகை எவ்வளவு…? கூட்டுறவுத்துறை உத்தரவு…!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்துள்ளார். அதாவது விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க் கடன் தள்ளுபடி, 6 சவரன் நகை கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழுக்கள் கடன் தள்ளுபடி என பல அறிவிப்புகளை அறிவித்தார். இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் நகைக்கடன் தள்ளுபடிக்கான அரசாணை வெளியாவதற்கு முன்னரே தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்தது.

இந்நிலையில் ஜனவரி 31ஆம் தேதி வரை கூட்டுறவு வங்கிகளில் எவ்வளவு பேர் நகைக்கடன் வைத்துள்ளனர், அதன் நிலுவையில் இருக்கும் நகை கடன் விவரங்களை அளிக்க கூட்டுறவு சங்கங்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், ஊரக வளர்ச்சி வங்கிகள் இது போன்ற கூட்டுறவு வங்கிகளிடமிருந்து நகைக் கடன் விவரங்களை கூட்டுறவுத் துறை கேட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசு தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று அரசாணை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |