ஜெயக்குமார் பிளேபாய் என திமுகவின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார் பதிலளித்துள்ளார்.
சில நாட்களாக அரசியல் வட்டாரங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரக் கூடிய ஒரு விஷயம் திமுக எம்எல்ஏ கு.க செல்வம் கமலாலயம் என்று பாஜக தலைவர் சந்தித்து வந்ததுதான். இதையடுத்து அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கு.க செல்வத்திற்கு சாக்லேட் கொடுத்து ஏமாற்றி விட்டார்கள் என்று கருத்து தெரிவித்தார்.
இவரது கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் ஜெயக்குமார் கு.க செல்வத்திற்கு சாக்லேட் கொடுத்து விட்டார்கள் என்று “சாக்லேட் பாய்” கூறுகிறார் என உதயநிதிக்கு பதில் கொடுத்தார். தற்போது இதற்கு மறு பதிலளித்த, உதயநிதி என்னை சாக்லேட் பாய் என்று விமர்சித்த அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ப்ளேபாய் எனக் கூறியுள்ளார். சிறு குழந்தைகள் போல் மாறி மாறி கருத்து கூறி சண்டையிட்டு வரும் இவர்களது கருத்துக்களை நெட்டிசன்கள் கலாய்த்த வண்ணமுள்ளன.