Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம் விவகாரம்… ரஜினியை வம்புகிழுத்த டிடிவி தினகரன்‌…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண விவகாரம் குறித்து தமிழக சட்டசபையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்ததாக வெளியான தகவல் பொய் என்றும் அவர் டிசம்பர் 4ஆம் தேதி இறந்து விட்டார் என்பது தெரிய வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் சசிகலா, கே.எஸ். சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேர் ஜெயலலிதா மரணம் குறித்து குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து விசாரணைக்கு ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதனால் சசிகலாவுக்கு சிக்கலான சூழலல் நிலவி வருகிறது. இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று டிடி தினகரன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற மருதுபாண்டியர் நினைவு தினத்தில் பங்கேற்ற பிறகு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்,தூத்துக்குடி சம்பவத்தை எடப்பாடி பழனிச்சாமி தொலைக்காட்சியில் பார்த்து பொய்யான பேட்டி அளித்தது நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் மூலம் தெளிவாக தெரியவந்துள்ளது. தூத்துக்குடி சம்பவ அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட யாராக இருந்தாலும் பாரபட்சம் இன்றி தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து ஆறுமுகசாமி அறிக்கை அரசியல்வாதியின் அறிக்கை போல் உள்ளது. அப்போது ஆதரவாக பேசிய ரஜினிகாந்த் மீதும் குற்றச்சாட்டப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தார். மேலும் ஆறுமுகசாமி ஆணை அறிக்கைப்படி இனி முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் கூட மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற தயங்குவார்கள். தமிழகத்தின் பெரும் மதிப்பிற்குரிய மருத்துவர்கள் மற்றும் ராதாகிருஷ்ணன் போன்ற நேர்மையான அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |