தயாரிப்பாளர் தனஞ்சயன் விஜய் நடிக்கும் வாரிசு மற்றும் அஜித் நடிக்கும் துணிவு பட மோதல் குறித்து பேசியுள்ளார்.
நடிகர் விஜய் நடிக்கும் “வாரிசு” திரைப்படமும், நடிகர் அஜித் நடிக்கும் “துணிவு” திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதேபோன்று பல வருடங்களுக்கு முன்பு விஜய் நடித்த “ஜில்லா” திரைப்படமும் மற்றும் அஜித் நடித்த “வீரம்” திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாவதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கோலிவுட்டில் பொங்கல் பண்டிகை கலைகட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்த தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான தனஞ்சன் கூறியதாவது, ” நடிகர் விஜய் மற்றும் அஜித் படங்களான துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்கள் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த இரண்டு படங்களும் பெரிய படங்கள் என்பதால் முதல் ஒரு வாரத்திற்கு இரண்டு படத்திற்கும் சமமான திரையரங்குகள் கொடுக்கப்படும். பின்னர் எந்த படத்தின் கன்டென்ட் நன்றாக இருக்கின்றதோ அந்தப் படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். மேலும் பொதுவான ரசிகர்கள் எந்த படத்தை பார்க்க ஆர்வமாக இருக்கின்றார்களா அந்த படத்திற்கு கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்படும் என்று” அவர் தெரிவித்துள்ளார்.