Categories
சினிமா தமிழ் சினிமா

“ஜெய்லர்” படத்தின் இயக்குனர் எங்கே போயிருக்காரு தெரியுமா….? வைரலாகும் புகைப்படம் இதோ….!!!!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிக்கும் “ஜெய்லர்” படத்தின் படப்பிடிப்பு 50 %  நிறைவடைந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “அண்ணாத்த” திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூல் சாதனையை படைத்துள்ளது. இருப்பினும் ரஜினி ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் பெரியளவில் எதிர்பார்ப்பு தரவில்லை. இதனை அடுத்து ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை இயக்குனர் நெல்சன் பெற்றுள்ளார். இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த “பீஸ்ட்” படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் எதிர்பார்ப்புகளுடன் இருந்த விஜய் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. எனவே “ஜெயிலர்” திரைப்படத்தை ஹிட்டாக்கி விட வேண்டும் என்று முழு முயற்சியுடன் செயல்பட்டு வருகின்றார் இயக்குனர் நெல்சன்.

இந்தத் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், விநாயகர், வசந்த் ரவி மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். தற்போது புதிய போஸ்டருடன் “ஜெயிலர்” படத்தின் சூட்டிங் பூஜையுடன் துவங்கியுள்ளது. “படையப்பா” திரைப்படத்திற்கு பின் ரஜினி, ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்த “ஜெய்லர்” படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி துவங்கியுள்ளது. இந்நிலையில் விறுவிறுப்பாக துவங்கப்பட்ட இந்த படப்பிடிப்பு 80 % அளவிற்கு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் நெல்சனின் முந்தைய படங்களை விட “ஜெய்லர்” திரைப்படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இயக்குனர் நெல்சன் கத்தார் நாட்டிற்கு சென்று உலகக் கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த “ஜெயிலர்” திரைப்படத்தை அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியிடுவதாக படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இருப்பினும் ரஜினி தனது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கும் “லால் சலாம்” திரைப்படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |