Categories
தேசிய செய்திகள்

ஜார்கண்ட் உயிரியல் பூங்காவில்… 21 விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை…!!!

ஜார்கண்ட் உயிரியல் பூங்காவில் 21 விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள உயிரியல் பூங்காவில் 10 வயதான புலி ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் காரணமாக உயிரிழந்தது. பிறகு அந்த புலிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் புலிக்கு தொற்று இல்லை என்பது உறுதியானது. இருப்பினும் காய்ச்சல் காரணமாக புலி இறந்ததால், பூங்காவில் உள்ள அனைத்து புலி மற்றும் சிறுத்தைகள், சிங்கங்களுக்கும் பரிசோதனையை மேற்கொள்ள நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி நான்கு சிங்கங்கள், 9 புலிகள், 8 சிறுத்தைகள் என மொத்தம் 21 விலங்குகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |