9 வயதில் உடல் குறைபாட்டுடன் சாதனை புரிந்த சிறுவனுக்கு உலக அளவில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
உலக மக்கள் அனைவருக்கும் தனித்தனியான ஒரு திறமை கண்டிப்பாக இருக்கும். நம்மில் பலருக்கு எந்த ஒரு குறையும் இல்லாமல் இறைவன் படைத்திருப்பான். ஆனால், நிறைகளை மட்டும் வைத்துக் கொண்டு நமக்கு ஏதும் நல்லதே நடக்க வில்லை என்று குறை கூறிக்கொண்டு சுற்றித்திரியும் உலகம் இது. ஆனால் ஒரு சிலருக்கு உடலில் ஏதேனும் ஒரு குறை பாட்டை இறைவன் தந்து விடுகிறான். ஆனால் அந்த குறையை ஒரு பொருட்டாக நினைக்காமல்,
தங்களிடம் உள்ள திறமையை வெளிக்கொண்டு வந்து சாதனை படைக்கும் மனிதர்கள் இந்த உலகில் தொடர்ந்து வலம் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில், ரூபிக்ஸ் கியூப் விளையாட்டு மூளையை சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் வைத்துக் கொள்ள உதவும் ஒரு விளையாட்டு. இதனை வைத்து 9 வயது சிறுவன் ஒருவன் நிகழ்த்திய சாகசம் இணையதளத்தில் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.
டிஸ்லெக்சியா என்ற பாதிப்பு இருக்கும் அச்சிறுவன் WWE பிரபலம் ஜான் சீனா உருவத்தை ரூபிக்ஸ் கியூப் வைத்து உருவாக்கியுள்ளார். இந்த வீடியோவை WWE சூப்பர் ஸ்டார் ஜான் சீனா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பாராட்டியுள்ளார். டிஸ்லெக்சியா பாதிப்பு இருக்கும் அச்சிறுவனால் எளிதாக வாசிக்கவும், எழுதவும் முடியாது. இதை வைத்து பலர் அவனை கிண்டல் கேலி செய்துள்ளார்கள்.
இதனால் பல சமயங்களில் அச்சிறுவன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதை தொடர்ந்து, நம்மிடம் உள்ள ஏதேனும் ஒரு திறமையை இந்த உலகத்திற்குக் காட்டி நிரூபித்துவிட்டால், இவர்கள் யாரும் நம்மை கேலி செய்ய மாட்டார்கள் என்று நினைத்து அவர் செய்த முயற்சி அவர் நினைத்தது போல் உலக அளவில் அவரை பேமஸ் ஆக்கி உள்ளது. அச்சிறுவனுக்கு தற்போது பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.