ஜி-7 மச்சி மாநாட்டை அமெரிக்காவில் நடத்த வேண்டுமென அமெரிக்க அதிபர் விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
ஜி7 உச்சி மாநாட்டை அமெரிக்காவில் நடத்துவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விருப்பம் கூறியுள்ளார். கிரிமியா தீபகற்பத்தை ஆக்கிரமித்ததால், ஜி-7 நாடுகளின் குழுவில் இருந்து ரஷ்யா முழுவதுமாக நீக்கப்பட்டது. இருந்தாலும் ஜி-7 மாநாட்டில் ரஷ்யா பங்கேற்க வேண்டுமென டிரம்ப் அழைப்பு விடுத்திருக்கிறார். இதுபற்றி அவர் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தேர்தல் முடிந்தவுடன் இது பற்றி முடிவு எடுப்பேன். கொரோனா காரணமாக வீடியோ கான்பரன்சிங் மூலம் கூட்டம் நடத்தப்படும். தேர்தலுக்குப் பின்னர் ஜி-7 மாநாட்டை நடத்துவதே சரியாக இருக்கும் என்று உயர்மட்ட அலுவலர்களிடம் கூறியுள்ளேன். இது மிகவும் முக்கியமான கூட்டம் என்பதால் முடிவை எடுப்பதற்கு அனைவருக்கும் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ரஷ்யா மட்டுமல்லாமல், ஆஸ்திரேலியா, தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகள் ஐ அழைக்க உள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார். கடந்த ஜூன் மாதம் ஜி-7 நாடுகளின் குழுவில் ரசியாவை மீண்டும் இணைக்க கூடாது என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஜி-7 நாடுகளின் குழுவில், கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன.