அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடன் வெள்ளை மாளிகையை அலங்கரிப்பதற்காக வட கரோலினாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
அமெரிக்காவில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெள்ளை மாளிகையை அலங்கரிப்பதற்காக குதிரை வண்டியில் கிறிஸ்துமஸ் மரம் கொண்டுவரப்படும். அந்த வகையில் இந்த வருடம் கிறிஸ்துமஸ் மரம் வட கரோலினாவிலிருந்து வெள்ளை மாளிகைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவ்வாறு குதிரை வண்டியில் கொண்டுவரப்பட்ட அந்த கிறிஸ்துமஸ் மரத்தை அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடன் பெற்றுக்கொண்டுள்ளார்.
மேலும் அந்த கிறிஸ்மஸ் மரம் 18.5 அடி உயரம் இருப்பதாகவும், வட கரோலினாவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே “அனைவரும் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் பாதுகாப்பாகவும் விடுமுறையை கொண்டாடுங்கள்” என்று அதிபரின் மனைவி ஜில் பைடன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.