Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஜிம்பாவே அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்டிரிக்கு…! 8 ஆண்டுகளுக்கு தடை விதித்த ஐசிசி…!!

ஜிம்பாவே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்டிரிக்கு ,  ஐசிசி கிரிக்கெட் வாரியம் எட்டு ஆண்டுகளுக்கு தடை விதித்துள்ளது.

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும்  சிறந்த பந்துவீச்சாளராக  திகழ்ந்தவர் ஹீத் ஸ்டிரிக் . இவர் கடந்த 2017 -2018 ஆம் ஆண்டுகளில் ஜிம்பாவே அணிக்கு பயிற்சியாளராக இருந்து வந்தார். அப்போது கிரிக்கெட் அணி பற்றிய தகவல்களை வேறு நபர்களுக்கு அளித்ததாகவும் ,கிரிக்கெட் வீரர்களை சூதாட்டத்திற்கு அணுகியதாகவும் மற்றும் லஞ்சம் வாங்கியது போன்ற ஐந்து விதமான குற்றச்சாட்டுகள் இவர் மீது வைக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்களை பற்றி ,ஐ.சி.சி விசாரணை நடத்தியபோது ,தான் செய்த தவறுகளை ஹீத் ஸ்டிரிக் ஒப்புக்கொண்டார். எனவே  ஐசிசி கிரிக்கெட் விதிமுறையை மீறி ஹீத் ஸ்டிரிக்  நடந்துகொண்டதால், அவருக்கு ஐ.சி.சி கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. அதில் 2029 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி வரை, இடைப்பட்ட 8 ஆண்டுகளில் நடைபெறும் கிரிக்கெட்  சம்பந்தமான போட்டிகளில்  வீரர்களுக்கு பயிற்சியாளராகவும்  , மற்றும் ஆலோசகராகவும் ஹீத் ஸ்டிரிக் செயல்படக் கூடாது என்று தடை விதித்துள்ளது.

Categories

Tech |