Categories
கிரிக்கெட் விளையாட்டு

#CWC19Final சூப்பர் ஓவரில் உயிரைவிட்ட ஜிம்மி நீஷம் பயிற்சியாளர்..!!

பரபரப்பாக நடந்த உலக கோப்பை சூப்பர் ஓவரை பார்த்து கொண்டிருந்த போது ஜிம்மி நீஷமின் பயிற்சியாளர் டேவிட் ஜேம்ஸ் கார்டன் உயிரிழந்தார்.   

கடந்த ஞாயிற்றுக்கிழமை  லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற  பரபரப்பான உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள்  மோதியது. இப்போட்டி இதுவரையில் யாரும் பார்த்திராத அளவிற்கு பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்திருந்தது. போட்டி ‘டை’ ஆனதால் சூப்பர் ஓவருக்கு சென்றது.  சூப்பர் ஓவரிலும் முடியாமல்  இரண்டு அணிகள் 15 ரன்கள் எடுத்து  ஆட்டம் ‘டை’ ஆனது.  ஐசிசி விதிகளின் படி அதிக பவுண்டரிகள் அடித்த அடிப்படையில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றதாக அறிவிக்கப்பட்டது.

Image result for jimmy neesham childhood coach david james gordon

 

உலக கோப்பை இறுதி போட்டியை பார்த்துக்கொண்டிருந்த ஜிம்மி நீஷமின் பள்ளிக்கால பயிற்சியாளர் டேவிட் ஜேம்ஸ் கார்டன், பரபரப்பாக நடந்த சூப்பர் ஓவரின் 2-வது பந்தில் ஜிம்மி நீஷம் சிக்ஸர் அடித்த தருணத்தில்  உயிர் பிரிந்ததாக அவரது மகள் கூறியுள்ளார்.ஆக்லாந்து கிராமர் பள்ளியில் ஆசிரியராகவும், ஜிம்மி நீஷமிற்கு விளையாட்டு பயிற்சியாளராகவும் இருந்தவர் கார்டன். நீஷமிற்கு மட்டுமில்லாமல் லாக்கி பெர்குசன், உள்ளிட்ட பலருக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார்.

Image result for jimmy neesham childhood coach david james gordon

இந்நிலையில் தன்னுடைய பள்ளி பயிற்சியாளர் கார்டன் உயிரிழந்தது குறித்து ஜிம்மி நீஷம் தனது ட்விட்டர் பக்கத்தில்,   டேவ் கார்டன், எனது உயர்நிலைப் பள்ளி ஆசிரியர், பயிற்சியாளர் மற்றும் நண்பர். இந்த விளையாட்டின் மீதான உங்கள் காதல் எங்களுக்கும் தொற்றி கொண்டது. குறிப்பாக உங்களுக்கு கீழ் விளையாடுவது  எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம். போட்டியை பார்த்துக் கொண்டிருக்கும் போதே நீங்கள் உயிரிழந்துள்ப்ளீ ர்கள் . நீங்கள் நிச்சயம் பெருமிதம் அடைந்தீர்கள் என்று நம்புகிறேன். அனைத்திற்கும் நன்றி. உங்களுக்கு எனது இரங்கல் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |