இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்களின் கட்டண உயர்வு வாடிக்கையாளர் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இயங்கிவரும் பல முன்னணி தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ப்ரீபெய்ட் விலை அதிகரித்துள்ளது. இந்த திட்டம் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் அமல் படுத்தி உள்ளது. அது மட்டுமில்லாமல் பல நன்மைகள் கொண்ட 3 ப்ரீபெய்ட் திட்டங்களான ரூ.499, ரூ.666 ரூ. 888 ஆகியவற்றை நிறுத்தியுள்ளது.
இது வாடிக்கையாளர்களின் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜியோ ப்ரீபெய்ட் திட்டமான 499 விலையில் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 3 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு ஆகியவை கிடைக்கும். அதனைத் தொடர்ந்து 666 விலையில் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 2 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ் எம் எஸ் மற்றும் வரம்பற்ற கால் அழைப்பு ஆகியவை கிடைக்கும்.
மேலும் 888 விலையில் விலையில் ஒவ்வொரு நாளும் 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம் பெற்ற கால் அழைப்பு கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் இதன் மூலம் ஜியோமியூசிக், ஜியோசினிமா மற்றும் ஜியோ கிளவுட் போன்ற அனைத்து ஜியோ பயன்பாடுகளின் சந்தாவும் வழங்கப்பட்டது. இவ்வாறு பல நன்மைகள் கிடைத்த இந்த மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களையும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது நிறுத்தியுள்ளது.