இந்தியாவின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான ஜியோ நிறுவனம் அதன் 5 ஜி வசதியை ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று அறிமுகம் செய்தது. நாடு முழுவதும் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை அறிமுகம் செய்து வைத்த நிலையில் பொதுமக்கள் பயன்படுத்தும் 5 ஜி மூலம் 1gb/நொடிஅளவில் முடிவில்லாத 5ஜி டேட்டா பயன்படுத்த முடியும். சென்னையில் 5g சேவையை ஜியோ தொடங்கியுள்ளது.தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் மட்டுமே பீட்டா சோதனையின் போது இந்த சேவைக்கான அணுக்களை பெறுவார்கள்.
இது தொடர்பாக பேசிய ஆகாஷ் அம்பானி, இன்னும் பல இடங்களில் இந்த 5G சோதனை செய்ய உள்ளோம். அதில் புதிதாக சென்னையும் சேர்ந்துள்ளது. மக்கள் அதிகம் கூடும் ரயில் நிலையங்கள், கல்வி நிலையங்கள்,பேருந்து நிலையங்கள் மற்றும் ஆன்மீக தலங்கள் உள்ளிட்ட இடங்களில் இதனை விரிவாக்க ஜியோ திட்டமிட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்