ஜியோ நிறுவனமானது தனது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் 3ஜிபி வரை டேட்டா வழங்கும் திட்டங்கள் குறித்து அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மிக குறைந்த காலகட்டத்தில் ஜியோ நிறுவனமானது அதிக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வபோது புதிய ஆஃபர்களையும் வழங்கி உள்ளது. இதனால் மற்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன. மேலும் மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் ஜியோவின் ஆஃபர்கள் பார்த்து ஜியோவுக்கு மாறி வருகின்றனர். கொரோனா 2-ஆம் அலையின் பாதிப்பால் வீட்டிலிருந்து பணிபுரிபவர்களுக்கு, ஜியோவின் அதிக டேட்டா தரும் புதிய ஆஃபர்களை அறிமுகப்படுத்தியது, ஜியோ பயனாளர்களுக்கு பெரும் உதவியாக இருந்தது.
இந்த நிலையில் ஜியோ நிறுவனம் தற்போது 21 சதவீதம் வரை ப்ரீபெய்டு ஆஃபரின் விலையை உயர்த்தியுள்ளது. அதனால் ரூ.129 என்ற விலை குறைந்த திட்டமானது, ரூ.155 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஜியோவின் ரூ.199 திட்டமானது ரூ.239 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 3 ஜிபி வரை டேட்டாக்களை ஜியோ வழங்கி வருகிறது. 3ஜிபி டேட்டாக்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- அதன்படி, 3ஜிபி நெட்வொர்க்கில் ரூ.419 ரீசார்ஜ் திட்டத்தில் தினமும் அன்லிமிட்டெட் அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் நாளொன்றுக்கு ஆகிய நன்மைகளை 28 நாட்களுக்கு பெறலாம்.
- இதனை அடுத்து ரூ. 601 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 100 எஸ்எம்எஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா, அதனுடன் கூடுதலாக 6 ஜிபி கூடுதல் டேட்டாவும் 28 நாட்களுக்கு வழங்கப்படும்.
- ரூ 1199 திட்டத்தில் தினமும் 3GB டேட்டா, நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் அனைத்து நெட்வொர்க்கிற்கு அன்லிமிடெட் அழைப்பு, ஜியோ கிளவுட், ஜியோ சினிமா மற்றும் ஜியோ டிவி ஆகிய நன்மைகளை 84 நாட்களுக்கு வழங்கியுள்ளது.