Categories
தேசிய செய்திகள்

Jio, Airtel, VI வாடிக்கையாளர்களுக்கு…. வெளியான அதிர்ச்சி செய்தி…..!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி சிம் கார்டு நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அளவுக்கு அதிகமான சலுகைகளை வழங்கி வருகிறது. அதனால் ஜியோ சிம் கார்டு அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தற்போது ஜியோ சிம் கார்டுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் முந்தியடித்து கொண்டு பல ஆஃபர்களை வழங்கி வருகிறது.

இந்நிலையில் ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த 6 மாதங்களுக்குள் இந்த கட்டண உயர்வு இருக்கலாம் என கூறப்படுகிறது. சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் சராசரி வருமானம் ரூ.230- இல் இருந்து 130 ரூபாயாக குறைந்துள்ளது என கூறியது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories

Tech |