Categories
Tech டெக்னாலஜி

4ஜி இணைய வேகத்தில் ஜியோ தான் முதலிடம்…. அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்குவதாக TRAI தகவல்…..!!!!!!

இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஜியோ, ஏர்டெல் போன்றவைகள் பிரபலமானதாக இருக்கிறது. சமீபத்தில் மத்திய அரசால் 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் விடப்பட்டபோது அதை ஜியோ நிறுவனம் தான் ஏலத்தில் எடுத்தது. இந்நிலையில் ஜியோ நிறுவனம் தான் மற்ற நிறுவனங்களை விட அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்குவதாக ட்ராய் நிறுவனம் தற்போது புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

இதேபோன்று அப்லோடு வேகத்திலும் ஜியோ நிறுவனம் தான் முதலிடத்தில் இருக்கிறது. அதன்படி ஜியோவின் சராசரி இன்டெர்நெட் டவுன்லோடு சராசரி வேகம் 20.3 Mbps ஆகும். அதன் பிறகு ஏர்டெலின் சராசரி இன்டர்நெட் டவுன்லோடு வேகம் 15 Mbps ஆகும். இதற்கு அடுத்த இடத்தில் வோடபோன் நிறுவனம் இருக்கிறது. இதன் இன்டர்நெட் டவுன்லோட் வேகம் 14.5 Mbps ஆகும்.

Categories

Tech |