Categories
பல்சுவை

ஜியோ பயனர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. 5G வசதி அடங்கிய பொது WiFi அறிமுகம்…. வெளியான அறிவிப்பு….!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாத்துவாராவில் இந்தியாவின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான ஜியோ நிறுவனத்தின் 5g வசதி அடங்கிய பொது Wifi அறிமுகம் செய்துள்ளது.இந்திய பிரதமர் மோடி கடந்த அக்டோபர் 1ஆம் தேதி 5ஜி சேவையை அறிமுகம் செய்து வைத்தார். அன்று முதல் ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு இந்தியா முழுவதும் 5ஜி சேவை வழங்கி வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் பயன்படுத்தும் 5G Wifi மூலம் 1 GB நொடி அளவில் முடிவில்லாத 5G டேட்டா பயன்படுத்த முடியும். இது குறித்து பேசிய ஜியோ நிறுவன தலைவர் ஆகாஷ் அம்பானி, இன்று இந்தியாவில் உண்மையான 5G வசதி கொண்ட பொதுமக்கள் பயன்படுத்தும் Wifi வசதியை புனித நகரமான நாத்துவாராவில் அறிமுகம் செய்து, பொதுமக்களுக்கும் கடவுள் ஸ்ரீநாத் அவர்களுக்கும் சமர்ப்பிக்கிறோம்.

அதனை தொடர்ந்து இன்னும் பல இடங்களுக்கு இந்த 5ஜி சோதனை செய்ய உள்ளோம். அதில் புதிதாக சென்னை சேர்ந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். அந்த நிறுவனம் பொதுமக்கள் அதிகம் புழங்கும் ரயில் நிலையங்கள், கல்வி நிலங்கள், ஆன்மீக தலங்கள், பேருந்து நிலையங்கள், வர்த்தக நிலையங்கள் போன்ற இடங்களில் இதனை விரிவாக்க திட்டமிட்டுள்ளது. ஜியோ நிறுவனத்தை பொருத்தவரை இந்தியா முழுவதும் 5g சேவை வருகின்ற 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கூறியது போலவே, இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்கள் அனைத்திலும் முதல் கட்டமாகவும், பின்னர் அனைத்து இடங்களுக்கும் அனைத்து இந்திய குடிமகன்களுக்கும் ஜியோ 5ஜி சேவை வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

Categories

Tech |