தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி சிம் கார்டு நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அளவுக்கு அதிகமான சலுகைகளை வழங்கி வருகிறது. அதனால் ஜியோ சிம் கார்டு அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் ஜியோ நிறுவனம் தனது பயனாளர்களுக்கு பல வசதிகளை வழங்கி வரும் நிலையில், தற்போது ஜியோ பயனர்கள் பில்களை செலுத்துவது, புதிய ஜியோ சிம்மையும் ஆர்டர் செய்வது உள்ளிட்டவற்றை வாட்ஸ்அப் சாட்போட்டை பயன்படுத்தி செய்துகொள்ள முடியும் என்றும் ஜியோ சிம் மூலம் ஜியோ மார்ட் கணக்கை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளது.