ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் இன்று முதல் மற்ற நெட்வொர்க்களுக்கு இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
நம் அன்றாட வாழ்க்கையில் செல்போன் தற்போது இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தற்போது பெரும்பாலான மக்கள் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களை நேரில் பார்த்து பேசி உறவாடும் காலம் ஓடிப்போய், தற்போது செல்போன் மூலமாக வீடியோ கால் செய்து பேசி வருகிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக ஜியோ சிம் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதனையடுத்து தனது வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி ஜியோ நிறுவனம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜியோ வாடிக்கையாளர்கள் மட்டும் நெட்வொர்க்களுக்கும் இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜனவரி 1 முதல் மற்ற நெட்வொர்க்குகான IUC அழைப்பு கட்டணத்தை ரத்து செய்வதாக TRAI அமைப்பு அறிவித்ததை தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது ஒரு நிமிடத்திற்கு 6 பைசா வீதம் மற்ற நெட்வொர்க் வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இனிமேல் அந்த கட்டணம் வசூல் செய்யப்படாது என தெரிவித்துள்ளது. இந்த அதிரடி அறிவிப்பு ஜியோ வாடிக்கையாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.